வில்லானாக, ஃபைட்டராக நடிக்கும் போது கூட இவ்வளவு விமர்சனங்களை பார்த்திருக்க மாட்டார் போல ‘பயில்வான்’ரெங்கநாதன். சினிமாவில் அவ்வப்போது தலையை காட்டி வரும் இவர் ‘யூ-டியூப்’ சேனல் ஒன்றினை நடத்தில் வருகிறார்.
அவரது சேனலில் ஒரு செய்தி வந்து விட்டது என்றால் அதில் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. நடிகர், நடிகையர் பற்றிய அந்தரங்கங்களை வெளிப்படையாக பளீச் என பேசி, பகீர் கருத்துக்களை உலாவரச்செய்து விடுவார். இதனால் பல இடஞ்சல்களையும் பார்த்தும் வருகிறார்.

கலைஞர் தொலைக்காட்சி வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கும் கவர்ச்சி நடிகை ஷகிலாவிற்கும் நடந்து விவாதத்தில் அனல் பறந்தது.
நிகழ்ச்சி துவக்கத்திலேயே காட்டித்தான் வாழ வேண்டுமா? என ஆரம்பித்தார் பயில்வான். ஆடியோ லாஞ்ச், பட ப்ரமோ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகைகள் கவர்ச்சியாக போஸ் கொடுப்பது எதற்கு என காட்டாமாக அவரது பாணியில் கேட்டார்.

அதற்கு ஷகீலாவோ அது அவர்கள இஷ்டம் அதை பற்றி உங்களுக்கென்ன என கேட்டுவிட்டார். இப்படி செய்து தான் அவர்கள் வயிறை வளர்க்க வேண்டுமா? என ரெங்கநாதன் கேட்க, அடுத்தவர்களின் அந்தரங்கங்களை பொதுவெளியில் பேசித்தானே நீங்கள் உங்கள் வயிற்றை வளர்க்கின்றீங்கர்கள் அண்ணா என பதிலடி கொடுக்க விவாதம் தீப்பிடித்தது.
அதோடு நிற்காமல ஷகீலாவின் தனிப்பட்ட வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் குறித்து பயில்வான் கேட்டு விட, உங்கள் குடும்பத்தில் நடந்து வரும் ஒரு முக்கியமான விஷயம் உங்களுக்கு தெரியுமா? என எதிர் கேள்வியை கேட்டார் ஷகீலா.
இறுதியில் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பகிரங்கப்படுத்துவதை நீங்கள் தவிர்த்துக்கொள்ளுங்கள அண்ணா என சொல்ல, தான் ஒரு புலனாய்வு சேனல் நடத்துபவன் அதனால் என் பணியை நான் தொடர்வேன் என்று முடித்தார் பயில்வான் ரெங்கநாதன்