சன் பிக்சர்ஸ், லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகள்ள “தலைவர்-171” பட ‘டைட்டில் டீஸர்’ வெளியிடப்பட்டது. பெயர் வெளியானதிலிருந்து உற்சாகத்தோடு இருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்…
ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு படத்தில் நடிக்க மாட்டாராம் ரஜினிகாந்த். இதை அவருடைய கொள்கையாகவே வைத்து வருகிறாராம் சில காலங்களாக.
ஆனால் “சன் பிக்சர்ஸ்”க்காக “வேட்டையன்” படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, “கூலி” படத்தில் ரஜினி கவனம் செலுத்தி உள்ளதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

பட டீசரில் வரும் “நினைத்தாலே இனிக்கும்” பட ‘ஜகமே தந்திரம்’ பாடல் வரிகளை ‘பஞ்ச்’ ஆக வைக்கப்பட்டதை விமர்சித்துள்ளார் பயில்வான். இப்போது எம்.எஸ்.விஸ்வநாதன், கே.பாலச்சந்தர் உயிரோடு இல்லை.
ஒருவர் எடுத்த வாந்தியை அள்ளி சாப்பிடுவது போல் இருக்கிறது. எதற்கு இந்த பாடல் பஞ்ச் டயலாக வைக்கப்பட்டது?, இதுதான் இதெல்லாம் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பத்து படங்களை பார்த்துவிட்டு அதுல கொஞ்சம்,இதுல கொஞ்சம் எடுத்து அதையே ஒரு முழு படமாக்கி வருபவர் லோகேஷ் கனகராஜ்.
கற்பனை வளம் குறைந்து விட்டால் வெளியில் தேடுங்கள், ஸ்டோரி டிஸ்கஸன் வையுங்கள் அதை விட்டுவிட்டு இதெல்லாம் செய்யாதீங்க…
சரத்குமார் நடித்த படத்தின் பெயரையே வைக்கப்பட்டு இருப்பது ஏன் எனவும் வேறு பேர் ஏதும் கிடைக்கவில்லையா?. “ஆறிலிருந்து அறுபது வரை” போல கதையம்சம் உள்ள படத்தில் ரஜினிகாந்தை பயன்படுத்தினால் நன்றாகயிருக்கும்.
அதை விட்டுவிட்டு இந்த மாதிரி படத்தில் எடுத்தால் எப்படி ஓடும்? எனவும் என்றும் “கூலி “பட டீசர் குறித்து விமர்சித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்…