cinema news
இத மட்டும் ரஜினிக்கு குறைச்சிக்கனும்!…இப்படி ஒப்பனா சொன்ன சூப்பர் ஸ்டார் பட இயக்குனர்?…
ரஜினி, கமல் இந்த இருவருவரும் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் ரசிகர்களை தொடர்ச்சியாக ரசிக்க வைத்து வருபவர்கள். இருவருக்குமிடையே இன்றும் தொழில் ரீதியான போட்டியிருந்தாலும் இருவரும் இன்றளவும் நல்ல நண்பர்களாக இருநது தான் வருகின்றார்கள் தனிப்பட்ட வாழ்விலும் கூட.
இவர்கள் இருவரும் இன்று இந்த அளவு உயர முக்கிய காரணமாக இருந்தவர் யார் என்று கேட்டால் இந்த பெயரை நிச்சயமாக தவிர்க்கவே முடியாதது என்பதனை அடித்து சொல்லிவிடலாம். கே.பாலச்சந்தர் தான் அந்த நபர். இருவரின் வாழ்வில் இவரது பங்கு என்பது சத்தான ஆகாரம் சாப்பிட்டு திடமாக வளர்ந்த ஆரோக்கியமான குழந்தைகள் போலத்தான் இருக்கும் என சொல்லலாம்.
பாலச்சந்தர் ஒரு முறை இருவரின் பலம், பலவீனம் குறித்து பேசியிருந்தார்.
ரஜின பற்றி சொன்னபோது அவரின் ஆன்மீகத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைதான். அவரது வெற்றிக்கு இதுதான் முக்கிய காரணமாக ரஜினியும் கருதிவருகிறார். அதே போல ரஜினியின் பலவீனம் என இதை சொல்ல முடியாது என அவர் குறிப்பிட்டது தனது படம் வெளியாகும் போது அவர் அடையும் பதட்டம் தான்.
எத்தனை படங்களில் அவர் நடித்திருந்தாலும், தனது முதல் படம் வெளியாகும் போது இருக்கும் டென்சன் மாதிரித்தான் இருப்பாராம். இதனை கொஞ்சம் குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். இருக்கும் என் சொல்லியிருந்திருக்கிறார்.
அதே மாதிரி கமல்ஹாசனை பற்றி சொல்லும் போது அவரின் தன்நம்பிக்கைதான் என சொல்லியிருந்தார். அதே அவரின் பலவீனம் என்று சொல்ல பெரிதாக ஒன்றும் கிடையாது.
ஆனால் ஓய்வே இல்லாமல் அவர் தொடர்ச்சியாக உழைப்பதை நிறுத்திக்கொண்டால் இன்னும் அவரது வளர்ச்சிக்கு அது இன்னும் அதிகமாக இருக்கும் என பாலச்சந்தர் அவரது காலத்திலே சொல்லியிருக்கிறார்.