ரானா தக்குபாடி – தெலுங்கு நடிகரான இவர் பாகுபலி திரைப்படத்தின் முலம் இந்தியளவில் பேசப்படும் நடிகராக மாறினார்.
இவரும் நடிகை த்ரிஷாவும் ஒரு காலத்தில் காதலிப்பதாக கிசுகிசுக்கபட்டது. இந்நிலையில் சென்ற வாரம் தன் காதலினுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு அத்துடன் ”அவள் சம்மதம் சொல்லிவிட்டாள்” என்ற பதிவிட்டு சோஷீயல் மீடியாவில் பகிர்ந்திருந்தார்.
அதனை தொடர்ந்து, இன்று நிச்சயதார்த்த போட்டோவை வெளியிட்டு, ”அது அதிகாரப்பூர்வமானது” என்ற பதிவுடன், தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்களும் பலர், அவருக்கு வாழ்த்துகளை குவித்து வருகின்றனர். இன்னும் சிலர், “நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சி, அப்புறம் என்ன கல்யாணம் தான்!!” என்று கிண்டலடித்தும் வருகின்றனர். தற்போதைக்கி இந்த ஜோடியின் நிச்சயதார்த்த புகைப்படம் இணைத்தை ஒரு கலக்கு கலக்கியுள்ளது.
