Connect with us

துப்பாக்கியை தூசு தட்டி கையில் எடுக்கும் விஜய்!…கோட் படத்திற்கு முன் காத்திருக்கிறதா சர்பிரைஸ்?…

thuppakki

cinema news

துப்பாக்கியை தூசு தட்டி கையில் எடுக்கும் விஜய்!…கோட் படத்திற்கு முன் காத்திருக்கிறதா சர்பிரைஸ்?…

 

விஜய் நடித்து வரும் “கோட்” படம் கிட்டததட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தனது கட்சி பணிகள் வேகப்படுத்தப்படும் என சொல்லியிருந்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.

“கோட்”ற்கு அடுத்த படியாக அவர் நடிக்கவுள்ள படத்தினை எஹ்.வினோத் இயக்கப்போவது உறுதியாகி விட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சம்மர் ஸ்பெஸலாக “கில்லி” படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

முதல் முறை வெளியாவது போல கருதிய ரசிகர்கள் , வெளியான தினத்தன்று கொடுத்த வரவற்பும், படத்திற்கு கிடைத்த கலக்ஷனும் வாயடைக்க வைத்தது. நேற்று கூட பிரேம்ஜி அமரன் திருமணம் பற்றிய அறிவிப்பில் “கோட்” படத்தின் அப்டேட் விரைவில் என சொல்லியிருந்தார் படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு.

“கில்லி” படம் சமீபத்திய சாதனை உணர்த்தியுள்ளது எந்த விதமாக பார்க்கப்படுகிறது என்றால் விஜய் திரையில் வந்தாலே போதும் அது புது படமாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என அவரது ரசிகர்களால்.

vijay birthday

vijay birthday

தனது ரசிகர்ககளின் நாடித்துடிப்பை நன்கு அறிந்தவர் விஜய். விஜய் ரசிகர்கள் முக்கியமான தினமாக பார்ப்பது விஜயின் பிறந்த தினத்தையே. இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் “கோட்” படம் வெளியாகும் முன்னரே தங்களது விருப்ப நாயகனை திரையில் பார்க்க போகின்றனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த விஜயின் ப்ளாக் பஸ்டர் படங்களில் ஒன்றான “துப்பாக்கி” விஜயின் பிறந்த தினமான ஜூன் 22 அன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த மே மாதம் அஜீத்தின் பிறந்த தினத்தன்று “தீனா”, “பில்லா” படங்கள் வெளியானது. அதே போல விஜயின் பிறந்த தின ட்ரீட்டாக “துப்பாக்கி” வெளியாக உள்ளதாம்.

Continue Reading
You may also like...

More in cinema news

To Top