vijayakanth r.sundarajan
vijayakanth r.sundarajan

நீங்க ரெண்டு பேரும் வேண்டாம்…படம் எடுத்தது போதும்…பணத்தை திருப்பிகொடுங்க…சுந்தர்ராஜனிடம் கரார் காட்டிய தயாரிப்பாளர்!…

காமெடி நடிகராகவே பார்த்து பழக்கப்பட்டவர் ஆர்.சுந்தரரஜன். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கூடவே தான் இவர். ரஜினிகாந்தின் சூப்பர், டூப்பர் ஹிட் படமான ராஜாதி ராஜா வை இயக்கி அதில் நடித்திருகவும் செய்திருபார் இவர். இவரை சந்திக்கவே கால்கடுக்க காத்திருக்க வேண்டுமாம் தயாரிப்பாளர்கள் ஒரு காலத்தில்.

நிற்க நேரமின்றி பறந்து கொண்டிருந்த ஆர்.சுந்தர்ராஜனை வைத்து படம் எடுக்க ஏ.வி.எம். நிறுவனம் விரும்பியதோடு அவருக்கு அட்வான்ஸாக இரண்டு லட்ச ரூபாயையும் கொடுத்துள்ளது. படத்திற்கு கதையை தயார் செய்துவிட்டு தயாரிப்பு நிறுவனத்திடம் பட நடிகர்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

விஜயகாந்த் தான் இந்த கேரக்டரில் நடித்தால் நன்றாக இருக்கும் என சுந்தர்ராஜன் சிபாரிசு செய்ய ஏ.வி.எமோ அவருக்கு பதிலாக சிவகுமாரின் பெயரை சொல்லியதாம். சிவகுமாரை கதாநாயகனாக வைத்து சுந்தரராஜன் இயக்கிய “நான் பாடும் பாடல்” படத்திற்கு அடுத்த படம் தான் இவர்கள் இருவரும் இணைய நினைத்த படம்.

விஜயகாந்த் நடித்தால் அந்த கேரக்டர் வலிமையாக இருக்கும் என் சுந்தரராஜன் சொல்ல, ஏ.வி.எம் கடைசி வரை அதற்கு சம்மதிக்கவைல்லையாம். அதோடு படம் எடுக்க வேண்டாம், நாங்கள் கொடுத்த அட்வான்ஸை திருப்பி தாருங்கள் என ஏ.வி.எம். சுந்தரராஜனிடம் சொல்ல, பணத்தை செலவளித்து விட்ட அவரோ என்ன செய்வது என தெரியால் திகைத்து இருக்கிறார்.

நடந்த கதைகள் எல்லாவற்றையும் சோகத்தோடு கதாசிரியர் தூயவனிடம் சொல்ல, அவர் நாம் இருவருமே இந்த படத்தை எடுக்கலாம் என சொல்லி சுந்தர்ராரஜனுக்கு பணத்தை கொடுத்து உதவியிருக்கிறார். அதை கொண்டு தான் ஏ.வி.எம்.மிடம் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்திருக்கிறார் சுந்தர்ராஜன்.

vaitheki kaaththirunthaal
vaitheki kaaththirunthaal

நினைத்து போலவே விஜயகாந்தை நடிக்க வைத்தார். வெள்ளைச்சாமியாக விஜயகாந்த் நடித்து சூப்பர் ஹிட் ஆன படமான “வைதேகி காத்திருந்தாள்” படத்தை எடுக்கத்தான் இத்தனை தடைகளை சந்தித்துள்ளார் ஆர்.சுந்தர்ராஜன். படத்தில் பேசும் பொருளாக மாறியது விஜயகாந்த் நடித்த வெள்ளைச்சாமி கேரக்டர் தான்.