Published
10 months agoon
தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் மெர்சல், தெறி, பிகில் என 4 படங்களை இயக்கியுள்ளார்.இதில் தெறி படம் இவரது படத்தில் மாஸ் ஹிட் ஆன படம் என சொல்லலாம்.
இவர் காப்பி மன்னன் என சொன்னாலும் அதையெல்லாம் மீறி ஒரு படத்தை கமர்ஷியலாக எப்படி ப்ரசண்ட் பண்ண வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர். இதனால் ஒரு பக்கம் காப்பி மன்னன் என சொன்னாலும் இவரது படங்கள் ஓடிவிடும்.
இந்த நிலையில் அட்லி தற்போது ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் படம் இயக்கி வருகிறார். அந்த படம் சில காரணங்களால் ட்ராப் ஆனது என சொல்லப்பட்ட நிலையில் அது உண்மை இல்லை என தெரிய வந்தது.
இந்த நிலையில் அட்லி, ஷாருக்கான் இணையும் இந்த படத்தின் பெயர் ஜவான் என வைக்கப்பட்டுள்ளது.
After #Pathaan and #Dunki
Now #SRK × #Atlee — #Jawan
Announcement on the way 🔥🔥🔥#ShahRukhKhan pic.twitter.com/SBmdCkGN5J— Saleem Ali( SRK Fan) (@saleem8268) June 1, 2022