விஜய் 63 படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? – கசிந்த தகவல்

303

அட்லீ இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படத்திற்கு அதிரடியான தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, டேனியல் பாலாஜி, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷெராப், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். விளையாட்டை மையமாக கொண்ட இப்படத்தில் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு சிஎம் என பெயர் வைக்கலாமா என அட்லீ யோசித்து வருகிறாராம். அதாவது, இப்படத்தில் விஜயின் பெயர் க்ளெமெண்ட் மைக்கேல்.

எனவே அதை சுருக்கியே சி.எம் என பெயர் வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. என்னதான் விளக்கம் கொடுத்தலும், விஜயின் சமீபத்தியை திரைப்படங்கள் அரசியல் தொடர்புடையதாகவே இருக்கிறது. எனவே, சி.எம் – என்பதற்கு ரசிகர்கள் குறிப்பாக விஜயின் தீவிர ரசிகர்கள் என்ன அர்த்தத்தை எடுத்துக்கொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

பாருங்க:  முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தில் யார் ஹீரோ? - முக்கிய அப்டேட்