ashwant
ashwant

தம்பி பார்த்திபன் சார் படத்தில நடிக்க போறியா என்ன? கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அஸ்வந்த் அசோக் குமார்.

ashwanth & parthiban
ashwanth & parthiban

பின்பு அஸ்வந்த் தொலைக்காட்சி சீரியல், விளம்பரங்கள் என தொடர்ந்து வெள்ளி திரையில் தடம்பதித்தார். ஐரா, சூப்பர் டீலக்ஸ், வெண்ணிலா கபடி குழு2, அக்க்ஷ்ன், தம்பி என்று முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார். இத்தனை சிறு வயதிலே நடிப்பில் சக்கைபோடு போட்டுள்ளார்.

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் பார்த்திபனுடன் எடுத்த புகைப்படத்தில் “நேற்று ஒரு நல்ல மனிதரை சந்தித்தேன்” என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், “தம்பி பார்த்திபன் சார் படத்தில நடிக்க போறியா என்ன?” என்று கலாய்த்துள்ளார்.