Arya confim love with sayeesha and wedding

ஆர்யா – சாயிஷா காதல் ஜோடிக்கு மார்ச் மாதம் திருமணம்

நடிகர் ஆர்யா – சாயிஷா காதல் ஜோடிக்கு வருகிற மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

கஜினிமுருகன் படத்தில் ஜோடி போட்டு நடித்த ஆர்யாவும், சாயிஷாவும் காதல் கொண்டதாகவும், விரைவில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் என சமீபத்தில் செய்திகள் பரவியது. ஆனால், அவர்கள் இருவரும் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை. எனவே, இது வதந்தியாக இருக்கலாம் என கருதப்பட்டது.

இந்நிலையில் இது உண்மைதான் என ஆர்யா உறுதி செய்துள்ளார். காதலர் தினமான் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் சாயிஷாவுக்கு காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார். மேலும், எங்களின் பெற்றோர்களின் வாழ்த்துக்களுடன் வருகிற மார்ச் மாதம் நானும், சாயிஷாவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். உங்கள் அன்பும், வாழ்த்துக்களும் தேவை” என டிவிட் செய்திருந்தார்.

இதைக்கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்த பல திரை பிரபலங்களும் ஆர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.