ஸ்மைலி போட்டு கலாய்த்த அருண் விஜய் – கோபத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

215
ஸ்மைலி போட்டு கலாய்த்த அருண் விஜய் 01

நடிகர் அருண் விஜய் வாயை கட்டிக்கொண்டிருப்பது போல் போட்ட ஒரு ஸ்மைலி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகிபாபு, சதீஷ், ராதிகா, ரோபோசங்கர் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவான படம் மிஸ்டர் லோக்கல்.

ஆனால், இப்படம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. மேலும், இப்படத்தை பற்றி எதிர்மறையான விமர்சனங்களே வந்து கொண்டிருக்கிறது. படத்தின் திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லாததால் இப்படம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், நடிகர் அருண் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘வாயை மூடிக்கொண்டிருப்பது போல்’ ஒரு ஸ்மைலியை போட்டார். உடனே, அவர் மிஸ்டர் லோக்கல் தோல்வியை பற்றி நான் பேச மாட்டேன் என மறைமுகமாக கிண்டலடித்துள்ளார் என நெட்டிசன்கள் புரிந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவரை திட்டி கமெண்டுகளை பதிவு செய்தனர்.

இதனையடுத்து, மீண்டும் ஒரு டிவிட் போட்ட அருண் விஜய் ‘என்னுடைய  புதிய படத்தை பற்றிய அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது. இதற்கு முன்பு போட்ட டிவிட் அதை பற்றியதுதான். தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். நான் என்னுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்” என பதிவிட்டுள்ளார். ஆனால், அதற்கு எதற்கு அவர் அப்படி ஒரு ஸ்மைலியை போட்டார் எனத் தெரியவில்லை. அவர் என்ன விளக்கம் கொடுத்தாலும், அவர் சிவகார்த்திகேயனைத்தான் கிண்டலடித்துள்ளார் என நெட்டிசன்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

பாருங்க:  கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ பட டீசர் வீடியோ...