Connect with us

அர்ஜூன் அசச்சு பாக்க நினைச்சவரு சாதாரணமானவர் இல்லையாம்!…எம்.ஜி.ஆருக்கே வாத்தியாராம்?…

arjun mgr

cinema news

அர்ஜூன் அசச்சு பாக்க நினைச்சவரு சாதாரணமானவர் இல்லையாம்!…எம்.ஜி.ஆருக்கே வாத்தியாராம்?…

தெலுங்கு சினிமாவில் அர்ஜூனை அறிமுகப்படுதியவராக சொல்லப்படக்கூடியவர் ஸ்டன்ட் கலைஞர் சாகுல். இவரும் அர்ஜுனுடன் சேர்ந்து சில படங்களை செய்திருக்கிறார். இவருடன் அர்ஜூனுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு கோலிவுட்டிற்கே தெரிந்த விஷயம் தான்.

இவருக்கு பதிலாக வேறு ஒரு ஸ்டன்ட் கலைஞரை தனது படத்தில் புக் பண்ண நினைத்தார் அர்ஜூன். இதுவே இருவருக்கும் சண்டை வர காரணமாக இருந்தது என சொல்லபடுகிறது.

shakul arjun

shakul arjun

“கர்ணா” படம் தான் இவர்கள் இருவரும் கடைசியாக நடித்த படம். எம்.ஜி.ஆரின் சில படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றியவர் சாகுல். தனது பேட்டி ஒன்றில் பேசியிருந்த சாகுல் வீடு கட்ட, புதுமணை புகுவிழா வரை நடத்த தன்னிடம் பணம் குறைவாக இருந்ததாம். எம்.ஜி.ஆரின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றிருக்கிறார்களாம்.

இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். சாகுலை சற்று நேரம் பொறுமையாக இருக்க சொன்னாராம். வெகு நேரம் ஆகியும் தன்னை அழைக்கவில்லை என்பதால் எம்.ஜி.ஆரின் உதவியாளரிடம் சென்று மீண்டும் ஒருமுறை நினைவுப்படுத்த சொன்னாராம்.

ஆமாம் அவரை மறந்து விட்டேன் என சொல்லி சாகுலை வரச்சொன்னாராம் எம்.ஜி.ஆர். அப்போது தனது சூட்கேஸை திறந்து அதிலிருந்த 100ரூபாய் நோட்டுக்கட்டினை எடுத்து அதிலிருந்து நோட்டுக்களை எடுத்து சாகுலிடம் கொடுத்து போதுமா எனக்கேட்டாராம். அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என் எம்.ஜி.ஆர் கணக்கிடக்கூட இல்லையாம்.

அள்ளி, அள்ளி கொடுப்பது தான் எம்.ஜி.ஆரின் குணம் என்பது பலரும் அறிந்தது தான். ஆனால் அதை நேரில் பார்த்த அனுபவம் தன்னால் என்றும் மறக்க முடியாது அது தனக்கு கிடைத்த உதவியாக இருந்த போதும் என சொல்லியிருந்தார் சாகுல்.

More in cinema news

To Top