cinema news
படையப்பா போஸ்டரை ஒட்டீட்டு பாளையாத்தம்மனை காட்டிடீங்களே சுந்தர் சி!…என்னது தமன்னா தங்கச்சியா?…
அரண்மனை முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து சுந்தர்.சி வரிசையாக இரண்டு, மூன்று என நான்கு பாகங்களை எடுத்து அதே அரண்மனையிலேயே தனது திரை வாழ்வை தொடர்ந்து வருகிறார்.
இன்று ரிலீஸ் ஆகி உள்ளது அரண்மனை 4. படத்தில் சுந்தர்.சிக்கு தங்கையாக நடித்துள்ளார் தமன்னா. டீசர் பாடலில் நடனத்தை பார்த்த ரசிகர்கள், தமன்னாவுக்கு மிக முக்கியமான வேடம் வழங்கப்பட்டிருக்கும், அவர் தான் கதாநாயகி என்று தவறான கணக்கை போட்டு விட்டார்கள் என நினைக்க வைத்துவிட்டது படம் வெளிவந்த பிறகு.
வீட்டில் சும்மா இருந்த நேரத்தில் “வேதாளம்”, “அண்ணாத்த” போன்ற .அண்ணன் – தங்கச்சி’ சென்டிமென்ட் படங்களை அதிகமாக பார்த்திருக்கிறார் போல சுந்தர் சி. அரண்மனையை வாங்கி அதில் சில பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அதை விற்கும் முயற்சியில் இருப்பார் தமன்னாவின் கணவர் சந்தோஷ் பிரதாப்.
இந்த நேரத்தில் தமன்னா திடீரென தற்கொலை செய்து விட்டதாகவும்,
அதேபோல அவரின் கணவரும் மரணம் அடைந்து விட்டதாகவும் அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்கள் வர, அரண்மனைக்கு விரைகிறார் சுந்தர். சி.
அங்கு தனது தங்கையினுடைய குழந்தைகளை கொல்ல நினைக்கும் அமானுஷ்ய சக்திகளின் நோக்கம் என்ன?, அவைகளிடமிருந்து எல்லோரையும் எப்படி காப்பாற்றுகிறார்? என்பதுதான் இந்த படத்தின் முக்கிய கதை.
கதாநாயகியாக வரும் ராஷி கண்ணா அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். “கோவை”சரளா, யோகி பாபு, வி.டி.வி கணேஷ் காமெடியில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களை கச்சிதமாக முடித்துள்ளனர்.
படத்தினுடைய இசை திருப்திகரமாக இருப்பதாக முதல் கட்ட விமர்சனங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு குஷ்பூவும், சிம்ரனும் திடீரென வந்து ஆடி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பழிவாங்கும் கதையாக இருந்தாலும், பார்க்கும் விதமாகவே அமைந்திருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மற்ற பாகங்களில் இருந்ததை விட அரண்மனை-4ல் விறுவிறுப்பு சற்றே அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.