7-வது முறையாக தேசிய விருதை சொந்தமாக்கினார் ஏ ஆர் ரகுமான்… குவியும் பாராட்டு…!

7-வது முறையாக தேசிய விருதை சொந்தமாக்கினார் ஏ ஆர் ரகுமான்… குவியும் பாராட்டு…!

இசைபுயல் ஏ ஆர் ரகுமான் தனது ஏழாவது தேசிய விருதை இன்று பெற்றுக் கொண்டார்.

70ஆவது தேசிய திரைப்பட விருது விழா வழங்கும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்று வருகின்றது. விருது வாங்குவதற்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் பொன்னின் செல்வன் திரைப்படத்திற்கு 4 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த படத்திற்கான தேசிய விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 பெற்றுள்ளது. இதற்கான விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து தயாரிப்பாளர் சுபாஸ்கரன் பெற்றுக்கொண்டார். சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

இது அவரின் ஏழாவது தேசிய விருது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஏழு முறை தேசிய விருது வென்றிருக்கும் ஏ ஆர் ரகுமானுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.