ஆர்யா – சாயிஷா திருமணம் உண்மை அல்ல – அபர்ணதி!

1205

நடிகர் ஆர்யா உறுதி செய்யதாவரை நடிகை சாயிஷாவை அவர் திருமணம் செய்து கொள்கிறார் என வெளியான செய்தி ஒரு வதந்தி மட்டுமே என எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி தெரிவித்துள்ளார்.

கஜினிமுருகன் படத்தில் ஜோடி போட்டு நடித்த ஆர்யாவும், சாயிஷாவும் காதல் கொண்டதாகவும், வருகிற 9 மற்றும் 10ம் தேதிகளில் இஸ்லாமிய முறைப்படை அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது என சமீபத்தில் செய்திகள் பரவியது.

ஆனால், இதுவரை அவர்கள் இருவரும் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்ட அபர்ணதி ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் “ விஷாலுக்கு திருமணம் என செய்தி வெளியானதும், அதை அவர் டிவிட்டரில் உறுதி செய்தார். ஆனால், ஆர்யாவோ, சாயிஷாவோ இதுவரை தங்கள் திருமணத்தை உறுதி செய்யவில்லை. எனவே இந்த செய்தி வெறும் வதந்தியாக இருக்கவே 99 சதவீதம் வாய்ப்புண்டு” என தெரிவித்துள்ளார்.

பாருங்க:  வெளியானது ரஞ்சித் ஆர்யா படத்தின் பர்ஸ்ட் லுக்