Connect with us

அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை அரசியல் கட்சியில் இணைந்தார்

cinema news

அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை அரசியல் கட்சியில் இணைந்தார்

தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தவர் அனுராக் காஷ்யப். ஹிந்தியில் மிகப்பெரும் இயக்குனராக இருந்த அவர் மீது சமீபத்தில் பாயல் கோஷ் என்ற நடிகை பாலியல் குற்றச்சாட்டை கூறினார். சில வருடங்களுக்கு முன் தான் வாய்ப்பு கேட்டு சென்றபோது தன்னிடம் அனுராக் தவறாக நடந்து கொள்ள முயன்றார் என்பது இவரது குற்றச்சாட்டு ஆகும்.

இந்நிலையில் இவர் இந்திய குடியரசு கட்சி எனும் கட்சியில் இணைந்து உள்ளார். அனுராக் காஷ்யப் விவகாரத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவரான ராம்தாஸ் அத்வாலே பாயல் கோஷ்க்கு ஆதரவாக இருந்தார்.

இந்தக் கட்சி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது

சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தம் என் உடலிலும் ஓடுகிறது என்று பாயல் கோஷ் கூறியுள்ளார். “என் அப்பாவுடைய கொள்ளுத்தாத்தா புரட்சிகரமான ஒரு பத்திரிகையாளர். அவருக்குக் கொல்கத்தாவில் சிலை வைக்கப்பட்டுள்ளது. எனது மாமா  கொல்கத்தாவின் மேயராக இருந்துள்ளார். எனக்கும் சமூகத்துக்குச் சேவை புரிவது மிகவும் பிடித்தமான ஒன்று.

தங்கள் கடைசி மூச்சு வரை நாட்டுக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களான பினாய் போஸ் மற்றும் பாதல் குப்தா இருவரும் என் உறவினர்கள்தான். அவர்களுடைய ரத்தம் என் உடலிலும் ஓடுகிறது. எனவே, அவர்களுடைய நற்பெயரை நான் கெடுக்க மாட்டேன். ஆனால், எனக்கு தீங்கிழைக்கும் யாரையும் நான் சும்மா விடமாட்டேன்” என்று கூறியுள்ளார்.

More in cinema news

To Top