“விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு 20ம் தேதி முதல் மீண்டும் துவக்க பட இருக்கிறது என்ற தகவல் அஜீத் ரசிகர்களை மகிழ் வைத்துள்ளது. படத்தினை எப்படியாவது இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு திரையிட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறதாம் படக்குழு.
எந்த நேரத்தில் படத்திற்கு இந்த பெயரை தேர்வு செய்தோமோ என யோசித்திருப்பார் இயக்குனர் மகிழ் திருமேனி, பட ஷூட்டிங் முழுமையாக கடுமையான “விடாமுயற்சி” தேவைபடுவதால்.
அஜீத் ரசிகர்களின் “விடாமுயற்சி” அப்டேட் ஏக்கத்தை போக்கவே வந்தது போல “குட் பேட் அக்லி”. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதே போல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சொல்லப்போனால் “குட் பேட் அக்லி” தான் அஜீத் ரசிகர்களை கதற வைக்காமல் அவ்வப்போது ‘அப்-டேட்’ வெளியாகி வருகிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத் விரல் காட்டிய விதம் சர்ச்சைகளை கிளப்பினாலும் அதை பற்றி எல்லாம் கவலை படாத ரசிகர்கள் கொண்டாடி தள்ளிவிட்டனர் அதனை.

விரைவில் அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்க படக்கூடிய படத்தை பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது இப்போது. “பிரேமலு” படத்தில் ஹீரோவாக நடித்த நஸ்லேன் கஃபூர் “குட் பேட் அக்லி”யில் நடிக்க உள்ளதாக சொல்லுகிறது தற்போது கசிந்துள்ள இந்த தகவல். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரும் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் “குட் பேட் அக்லி” படத்தின் ஷூட்டிங் தடை ஏதுமின்றி வெகு வேகமாக நடந்து வருவதாக சொல்லப்படுவதால் பொங்கல் பண்டிகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் ஏ.கே. ரசிகர்கள். அதே மாதிரி “விடாமுயற்சி”யும் தீபாவளிக்கு வெளிவந்தால் துள்ளி குதித்து விடுவார்கள் அஜீத் ஃபேன்ஸ்.