Connect with us

கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வருதே!…முப்பத்தி இரண்டின் முடிவில் அண்ணாமலை?…

Annamalai

Latest News

கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வருதே!…முப்பத்தி இரண்டின் முடிவில் அண்ணாமலை?…

ரஜினி படங்கள் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது அவரது ஸ்டைல் தான். அடுத்தது படத்தில் அவர் பேசும் பஞ்ச் வசனங்கள். பின்னனி இசையோடு அந்த பஞ்ச் வசனங்களை கேட்டால் போதும், ரஜினி ரசிகனாக மாறிவிடலாமா? என யோசிக்க வைத்து விடுவார்.

தனது ஆரம்ப கால படங்களிலிருந்து பஞ்ச் டயலாக்களுக்கு எப்போதுமே பெரிய முக்கியத்துவதும் கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த அவரது “ஜெயிலர்” படத்தில் கூட ‘ ஒரு கட்டத்துக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது’. ‘டைகர் கா குக்கும்’ டயாலாக்குகள் மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.

ரஜினியின் வாழ்வில் இன்றும் பெயர் சொல்லும் விதமாக இருக்கக்கூடிய படம் “அண்ணாமலை”. படம் முழுக்க ரஜினி, ரஜினி தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தேவா இசையில் குஷ்பூ, சரத் பாபு, ராதாரவி, மனோரமா, ஜனகராஜ் உட்பட பலரும் நடித்திருந்தனர்.

இன்று வரை “அண்ணாமலை” படத்தில் ரஜினிக்கு தேவா போட்ட பிஜிஎம் தான் டைட்டில் கார்டு மியூசிக்காக இருந்து வருகிறது.

rajini annamalai

rajini annamalai

துரோகம், வஞ்சம், எதிர்ப்பு எல்லாவற்றையும் தாண்டி ரஜினி எப்படி ஜெயிக்கிறார் இது தான் படம். முதல் பாதியில் வெகுளி ரஜினி, இரண்டாவது பாதியில் மாஸ் ரஜினி படமோ வேற லெவல் ஹிட்.

‘மலைடா அண்ணாமலை டா’, இந்த பஞ்ச் டயலாக்கை ஸ்டைலாக ரஜினி சொல்வதை இப்போது பார்த்தாலும் விசில் அடிக்க வைத்து விடும்.

படத்தின் வில்லன் ராதாரவி பேசும் ‘கூட்டி கழிச்சி பாரு, கணக்கு சரியா வரும்’ இந்த டயலாக் படி பார்த்தால் இன்று ஜுன் 27ம் தேதிப்படி  படம் வெளியாகி முப்பத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. 1992ம் வருடம் இதே தேதியில் தான் “அண்ணாமலை” வெளியானது.

More in Latest News

To Top