“இந்தியன் – 2” படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் என்பது எல்லொருக்கும் தெரிந்தது தான். படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி விட்டது. ஆடியோ ரிலீஸ்ல் இருந்த பிரம்மாண்டம் கூட பாடல்களுக்கு இல்லை என சலசலப்பு இருந்து வருகிறது. அதிலும் அதிக விமர்சனம் ‘தாத்தா வராரு’ பாடலின் மீது தான்.
சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சவுத் இந்தியாவை கலக்குற மாதிரி ஒரு கொலாப் நாளைக்குன்னு ட்வீட் பண்ணிருந்தார் அனிரூத் நேற்று. இதை பார்த்ததிலிருந்தே அனிரூத் ஃபேன்ஸ் எல்லாம் அதா இருக்குமோ?, இதா இருக்குமோன்னு? பல விதமான திங்கிங் ல இருந்தாங்க.

அனிரூத் சொன்ன மாதிரியே நேத்து கொடுத்த சஸ்பென்ஸை இன்னைக்கு உடைச்சிட்டாரு. தனது நண்பர்களோட உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தார் அனிரூத்.
புதுசா ஏதோ படத்தோட ப்ரமோ சாங்காத்தான் இருக்கும்ங்கிற மாதிரி தான் இருந்தது அந்த டிஸ்கஷன். ஆள்,ஆளுக்கு ஒவ்வொரு கருத்தா சொல்லிட்டு இருந்தாங்க. திடீர்னு கையில எடுத்தாரு பாருங்க அனிரூத் கித்தார்னு நெனைச்சீங்களா? அது தான் இல்ல, ஒரு கம்பெனியோட சிப்ஸ் பாக்கெட்ட. அந்த கம்பேனிக்கு சார் தான் சவுத் இந்திய தூதுவராம்.
நாங்க என்னென்னலாமோ கற்பனை பண்ணி வச்சிருந்தோம். ஆனால் அதை எல்லாத்தையும் இப்படி சிப்ஸ் மாதிரி நொருக்கிட்டீங்களே தலைவான்னு அனிரூத் ஃபேன்ஸ் சொன்னாங்களாம். சரி இப்போ அதனால என்ன நீங்க என்ன செஞ்சாலும் நாங்க ரசிப்போம். வாங்க இப்ப ஒரு கப் காபி குடிக்கலாம்னு சொல்லிட்டு சிப்ஸ் பாக்கெட்டை தேடி போக ஆரம்பிச்சிட்டுடாங்க அனிரூத் ஃபேன்ஸ்.