“வேட்டையன்” படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். ‘தலைவர் 171’ படத்தினுடைய எதிர்பார்ப்பு தற்பொழுதே எகிறி உள்ளது.
படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிடும் “சன் பிக்சர்ஸ்” நிறுவனத்துடன் ரஜினிகாந்த் மீண்டும் இணைந்திருப்பது ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
தனக்கென தனி ஒரு ட்ரெண்ட்டை கையில் எடுத்து வித்தியாசமான கதை ஓட்டத்தையும், தெளிவான திரைக்கதையோடு படங்களை கையாளும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாலும் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததுமே ரஜினி கையில் வாட்சுடன் இருப்பது போல போஸ்டர் ஒன்றும் வெளியானது. இது படத்தை குறித்த யூகங்களை அதிகரிக்கச்செய்தது.
‘வெயிட்டிங்லேயே வெறியேறுது’என “வேதாளம்” படத்தில் அஜித் பேசும் வசனம் போல தான் ரஜினி ரசிகர்களின் தற்பொழுது இருந்து வருகின்றனர்.

‘தலைவர் 171’ பற்றிய ஒரு முக்கியமான அப்டேட் இன்று வெளி வருகிறது. படத்தினுடைய பெயரை இன்று ஆறு மணிக்கு வெளியிடப்போவதாக “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிருத்திருந்தது…
தனது ஸ்டைலால் சினிமா ஸ்கிரீனை வேட்டையாட காத்திருக்கும் “வேட்டையன்” ஒருபுறம் இருக்க, ‘ரஜினி 171’ படத்தினுடைய பெயர் எதுவாக இருக்கும்? என ஆர்வத்தில் இருந்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
படத்தின் பெயர் வந்தால் கதை எப்படி இருக்கும் சற்று கணிக்கலாம் என்ற ஆசையிலும், “ஜெயிலர்”க்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ள ரஜினியின் மார்க்கெட்டும் ‘தலைவர் 171’ அப்டேட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கின்றது.
பட்டாசு, இனிப்பும் கையுமாக வலம் வரக்காத்திருக்கும் ரசிகர்கள் ஒரு புறத்திலும், வலைதளத்தை தெறிக்கவிடவும் தயாராகி வருகின்றனர். எப்படியோ இன்று பெரிய ‘ட்ரெண்டிங்’ விருந்து காத்திருக்கிறது…