danush
danush

வருஷம் போனதே தெரியல…18 வருஷம் முடிஞ்சி போச்சு…அவசர பட்டுட்டிய குமாரு!…

அடுத்தடுத்து ஹிட். தனது உடன் பிறந்த சகோதரர் செல்வராகவனின் முதல் படமான் “காதல் கொண்டேன்”னில் அப்படி ஒரு நடிப்பு. தேருவாரா என கேள்வி கேட்டவர்களை, யார் இந்த பையன் என தேட வைத்து விட்டார் தனுஷ். “ராயன்” தனது 50 வது படம் இதில் கதாநாயகன் மட்டுமல்ல இயக்குனரும் கூட. அதோடு பாடலாசிரியர், பாடகர் என கலக்கியுள்ளாராம்.

செல்வராகவனுடன் தனது  இரண்டாவது படத்தில் இணைந்தார் தனுஷ். பிரபலமன சில வருடங்களிலே துணிவோடு அரசியல் படம். இந்த தைரியம் சிலருக்கு மட்டுமே தான் இருந்தது. நெகட்டிவ் கதாப்பாத்திரம் செய்தால் கூட விமர்சனம் வேறு மாதிரித்தான் இருக்கும் கோலிவுட்டை பொருத்தவரை.

ஆனால்  ஒரு நாயகன் அரசியல் சார்ந்த கதையில் நடிப்பது என்பது கயிற்றின் மீது நடப்பது போல. அத்தனை கருத்துக்கள் வரும், பல நேரங்களில் கேரியரை கூட காலி செய்து விடும். சினிமாவில் அப்படிப்பட்டது அரசியல் சார்ந்த கதைகள். ஆனால் கொக்கி குமார். இன்றும் தனுஷ் பெயரை சொல்லவைக்கும் படம் “புதுப்பேட்டை”.

pudhupettai
pudhupettai

ஒரு அப்பாவி எப்படி ரவுடி ஆகிறான். அதன் பின்னர் அரசியல் ஆசை அவனை எங்கே கொண்டு நிறுத்துகிறது இதுவே படம். அசத்தலான நடிப்பில் ஆச்சரியப்பட வைத்தார் தனுஷ் “புதுப்பேட்டை|”யின் மூலம். ‘அவரசப்படுட்டுடேயே குமாரு’ இன்றும் இந்த வசனம் பல இடங்களில் சாதாரன மனிதன் எதார்த்த வாழ்வில் சொல்லும் கவுண்டர் டயலாக இருந்துவருகிறது.

கடந்த 2006 மே மாதம் 26ம் தேதி வெளியானது இந்த படம். படம் வெளியாகி நேற்றோடு 18 ஆண்டுகள் நிறைவடைந்தது. பாலிவுட், ஹாலிவுட் என நாலாபக்கமும் பாய்ந்து, பாய்ந்து நடித்து வரும், தனுஷின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக இன்றும் பார்க்கப்படுகிறது “புதுப்பேட்டை”