Latest News
ராசி பார்த்து ஒதுங்கி நின்ற அமிதாப்பச்சன்…கண்ணீர் வரவழைத்த சம்பவம்…
அமிதாப்பச்சன் இந்திய திரை உலகத்தின் சூப்பர் ஸ்டார். பாலிவுட்டில் எத்தனை நடிகர்கள் வந்தாலும் இவருக்கென ஒரு மாஸ் எப்போதுமே இருந்து தான் வருகிறது. இவரது படங்கள் எப்போது வெளியானாலும் அதற்கென ஒரு ஃபேன் ஃபாலோயர்ஸ் இருந்து தான் வருகிறார்கள்.
அமிதாப்பச்சனும் ரஜினியும் நல்ல நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே தான். அமிதாபின் மகனான அபிஷேக் பச்சனின் மனைவியும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் ரஜினியுடன் “எந்திரன்” படத்தில் நடித்திருந்தார். ரஜினி நடிப்பில் அக்டோபர் மாதம் வெளியிடப்போவதாக எதிர்பார்க்கப்பட்டு வரும் “வேட்டையன்” படத்தில் நடித்து வருகிறார் அமிதாப்.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ள “வேட்டையன்” படத்தினை கோலிவுட் மட்டுமல்ல, பாலிவுட்டும் எதிர்பார்த்தே இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்ததை நாடே கொண்டாடி வருகிறது.
பிரபலங்கள் பலரும் சாதனை புரிந்துள்ள இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். அதே போல இந்த வெற்றி குறித்த தங்களது கருத்துக்களையும் சொல்லி வருகின்றனர்.
இது பற்றி பேசியுள்ள அமிதாப் பச்சன் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. கோப்பையை வென்றதில் மகிழ்ச்சி. ஆனால் மற்ற இறுதி போட்டிகளை பார்த்தது போல இந்த போட்டியை அமிதாப் பார்க்கவில்லையாம். அவர் பார்த்தால் போட்டியில் இந்திய அணி தோற்று விடும் என்பதால். இந்த அச்சம் அவருக்கு எப்போதுமே இருக்குமாம். நம் கிரிக்கெட் வீரர்கள் சிந்திய கண்ணீர் நம் கண்களிலும் நீராய் ஓடியது என உணர்ச்சி பொங்க சொல்லியிருந்தார்.