அஜீத் தற்போது இரண்டு படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தீபாவளிக்கு ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக நடந்து வருகிறது “விடாமுயற்சி” படத்தின் வேலைகள். படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. எப்போதும் போல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து சேர்ந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் வேற லெவல் எஞ்சாய்மென்டிற்கு சென்று விட்டனர் அஜீத் ஃபேன்ஸ்.
“குட் பேட் அக்லி” படத்தின் முதல் ஷெடியூல் முடிவடைந்தது அடுத்த கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் வேகமாக நடந்து வருகிறது. அங்கே நடக்கும் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வருகிறார் அஜீத். இந்த மாதத் துவக்கத்தில் சொந்த வேலைகளுக்காக அஜீத் சென்னை வரயிருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அப்படி இல்லாமல் அஜீத் தொடர்ந்து அஜர்பைஜான் நாட்டிலே தான் இருக்கிறார்.
“அமர்க்களம்” படத்தில் நடித்து வந்த போது அஜீத் – ஷாலினி இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் மணமுடித்து கனவன் – மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்வீக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அஜீத்தின் காதல் மனைவியான ஷாலினிக்கு உடல் நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. ஆபரேஷன் செய்தால் பிரச்சனை தீர்ந்து விடும் என ஷாலினியை பரிசோதித்த மருத்துவர்கள் அறிவுறுத்தியதின் படி அறுவை சிகீட்சை நடத்தப்பட்டிருக்கிறது.
பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி கிடப்பில் போடப்பட்டிருந்த “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் ஷாலினியின் ஆப்பரேஷனின் போது அஜீத் உடனிருக்க முடியாமல் போகிவிட்டது. அஜர்பைஜானிலிருந்த படியே ஷாலினியின் உடல் நிலையை பற்றி விசாரித்து வந்து கொண்டிருக்கிறாராம் அஜீத்.
தனது காதல் மனைவி உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் கூட படப்பிடிப்பு தான் முக்கியம். படப்பிடிப்பு தடை பட்டால் அது பலரையும் பாதித்து விடும் என்ற நல்ல எண்ணத்தினாலேயே அஜீத் சென்னைக்கு வரவில்லை.
தனது மனைவியை அருகில் இருந்து கவணிக்கவில்லை என்றாலும் அஜீத்தின் இந்த தொழில் பக்தியை வளர்ந்து வரும் இன்றைய இளம் நடிகர்கள் பார்த்து அவரை போலவே சினிமாவின் மீது அக்கறை காட்ட வேன்டும் என பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.