நடிகர் விஜயின் நடன திறமையை கண்டு அஜித் வியந்த சம்பவத்தை நடிகர் ரமேஷ் திலக் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
திரைத்துறையில் நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் போட்டி நடிகர்களாகவே பார்க்கப்படுகின்றனர். அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து மோதி வருகின்றனர். ஆனால், விஜய், அஜித் இருவரும் நட்பு பாராட்டி வருகின்றனர். சந்தர்ப்பம் அமையும் போது சந்தித்து பேசவும் செய்கின்றனர்.
விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடித்த நடிகர் ரமேஷ் திலக் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித்துடனான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
நானும், அஜித் சாரும் கேரவானில் தொலைக்காட்சி பார்த்த போது ‘தெறி’ படத்தின் பாடல் வந்தது. அதை பார்த்தவுடன் ‘விஜய் ஒரு பிறவி நடிகர்’ என அஜித் பாராட்டினர். மற்ற நடிகர்களை போட்டியாக பார்க்காமல் பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே என ரமேஷ் திலக் கூறினார்.