“உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்” படத்தில் கார்த்திக், ரோஜா நடித்திருந்தனர். கௌரவ வேடத்தில் அஜீத் நடித்திருந்தார். கதாநாயகன் கார்த்திகின் நண்பராக ரமேஷ் கண்ணா நடித்திருந்தார். கார்த்திக், ரோஜா, பின்னனி இசை அதற்கு பிறகு படத்தில் அதிகமாக காணப்பட்டவர் ரமேஷ் கண்ணா தான்.
விக்ரமனுக்கு இவர் மீது எப்போதுமே தனி பாசம் இருந்து வந்ததாம். தனது படங்களில் ரமேஷ் கண்ணாவை ஒரு காட்சியிலாவது நடிக்க வைத்து அழகு பார்ப்பாராம் விக்ரமன். “கோகுலம்” படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அதே போல தான் “நான் பேச நினைப்பதெல்லாம்” படத்திலும்.

சரத்குமார் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன “சூர்யவம்சம்” படத்தில் டிராமா டைரக்டர் வேடத்தில் நடித்திருந்தார். “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்”படத்தில் எப்பவும் போல ஓரு காட்சியில் தான் நடிக்க வேண்டியதிருக்கும் என்ற நினைப்பில் படப்பிடிப்பிற்கு சென்றாராம் ரமேஷ் கண்ணா. காட்சி முடிந்ததும் விக்ரமனிடம் அடுத்த படத்துல நல்ல கேரக்டர் கொடுங்க, நா கிளம்புறேன்னு சொன்னாராம் ரமேஷ் கண்ணா.
அதற்கு விக்ரமனோ இந்த படத்துல் உங்களுக்கு ஒரு சீன் மட்டும் கிடையாது, படத்துல உங்களுக்கு முக்கியமான ரோல் இருக்கு நாளைக்கு வந்திருங்க என சொன்னாராம். இதற்கு முன்னர் ஒரு காட்சியில் ரமேஷ் கண்ணாவை பயன்படுத்தி விட்டு அடுத்த படத்தில் நல்ல வேஷம் தருகிறேன் என சொல்லி அனுப்புவாராம் விக்ரமன்.
அப்படி தான் இருக்கும் இந்த படத்திலும் என நினைத்து தான் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பட முதல் நாள் ஷூட்டிங் முடிந்ததும் நினைத்தாராம்.
ஆனால் பட ஷூட்டிங்கிற்காக ஒவ்வொரு நாளும் வரும் போது பயத்தோடு தான் வருவாராம் ரமேஷ் கண்ணா. கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்த ரமேஷ் கண்ணா “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” படத்தில் நடித்த போது தான் அஜீத் , தேவயானி நடித்த தொடரும் படத்தின் ஷூட்டிங் துவங்கியிருந்தது. தொடரும் படத்தின் இயக்குனர் ரமேஷ் கண்ணாவே தான்.