cinema news
வேற லெவல் பண்ண போகுதா படம்?…வேஷ்டி சட்டையில் அஜீத்!…ரசிகர் கொடுத்த அன்பு பரிசு…
அஜீத்குமார் நடித்து வரும் “விடாமுயற்சி” படத்தின் ஷூட்டிங் மீண்டும் அஜர்பைஜான் நாட்டில் துவங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
படக்குழு மீண்டும் அங்கு சென்றுள்ளது. இது அஜீத் ரசிகர்களை மகிழச்செய்துள்ளது. அதே போல இந்த முறை படத்தின் ஷூட்டிங்கிற்கு எந்த விதாமான தடையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுவே ரசிகர்களின் வேண்டுதலாக இருந்து வருகிறது.
இதற்கு ஏற்றார் போல தனது மகள் ஐஸ்வர்யா திருமணம் முடிந்த கையோடு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அர்ஜூன் “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து விடும் என சொன்னார்.
மொத்தத்தில் இருபது, முப்பது சதவீதம் பாக்கியிருக்கிறது அதை விரைந்து படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இதற்காக அர்ஜூனும் அஜர்பைஜான் நாட்டிற்கு செல்ல இருப்பதாக பேசியிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, ஆதீக் ரவிச்சந்திரன் டைரக்சனில் அஜீத் நடித்து வரும் “குட் பேட் அக்லி” படத்தின் படப்பிடிப்பும் வேகமாக நடந்து வருகிறது. இப்படி இருக்கையில் அஜீத் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் இருக்கும் அஜீத்திற்கு ரசிகர் ஒருவர் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பரிசினை வழங்கினார்.சாமி தரிசனத்திற்கு வந்திருந்த அஜீத்திற்கு அவரது ரசிகர் பரிசு கொடுத்த போட்டோ தான் இப்போது வைரலாக பரவி வருகிறது.
இதை பார்த்த அஜீத் ரசிகர்கள் சாமி தரிசனத்தை அஜீத் முடித்து விட்டார். அதனால் அவர் நடித்து வரும் “விடாமுயற்சி”, “குட் பேட் அக்லி” படங்களும் மிகப்பெரிய வெற்றி பெரும் என நம்பிக்கையோடு பேசி வருகின்றனர்.