தமிழில் செல்வா இயக்கிய அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜீத்குமார். எந்த ஒரு சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் முன்னணி நடிகராக உயர்ந்தவர் அஜீத்.
அஜீத் நடிப்பில் முதன் முதலில் மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் ஆசை. அந்த படத்துக்கு பிறகு வாலி வெற்றி பெற்றது. இந்த இரண்டு படங்களின் மூலம் அஜீத் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்தார்.
தொடர்ந்து அஜீத் நடித்த அமர்க்களம், சிட்டிசன் , ரெட், மங்காத்தா போன்ற படங்கள் அஜீத்துக்கு மாஸ் அந்தஸ்தை கொடுத்தது. சமீபத்தில் அஜீத் நடித்து வெளிவந்த வலிமை படத்துக்கு அஜீத் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை எந்த ஒரு நடிகரின் ரசிகர்களும் செய்திருக்க மாட்டார்கள்.
தனது ரசிகர் மன்றத்தை அஜீத் கலைத்து 10 வருடங்களாகிறது. இன்னும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளத்துக்கு குறைவில்லை. அஜீத்துக்கு இன்று பிறந்த நாள். மே 1ம் தேதி வந்துவிட்டாலே அஜீத் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது. தல அஜீத் ரசிகர்கள் பெயரில் பல நற்பணிகளை செய்து திகைக்க வைத்து விடுவார்கள் எந்த ஒரு ஆதரவுமின்றி தனி ஒரு ஆளாக போராடி இன்று முன்னணி நடிகராக உயர்ந்து இருக்கும் அஜீத் அவர்களை வாழ்த்துவோம்.