தொடரும் ஹிந்தி சினிமா இழப்புகள் அஜய் தேவ்கன் சகோதரர் மரணம்

தொடரும் ஹிந்தி சினிமா இழப்புகள் அஜய் தேவ்கன் சகோதரர் மரணம்

கொரோனாவால் மரணமடைபவர்கள், வேறு உடல் நோய்கள் சார்ந்த பிரச்சினைகளால் மரணம் அடைபவர்கள் என இந்த வருடம் அதிகமாகவே இருக்கிறது. இது திரையுலகத்திலும் தொடர்கிறது.

இந்த வருடம் திரையுலகத்தில் கொஞ்சம் அதிகமாகவே உயிரிழப்புகள் நடந்து விட்டன. கொரோனா தவிர்த்து மற்ற நோய்களால் இறப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நேற்று பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனின் சகோதரர் அனில் தேவ்கன் மரணம் அடைந்துள்ளார். இவர் நீண்ட நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவருக்கு வயது 45.

திரையுலக பிரபலங்கள் பலரும் அஜய் தேவ்கனின் குடும்பத்துக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.