ஆல்ய மானசா-சஞ்சீவ் சின்னத்திரை ஜோடிகளான இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம்.
சின்னத்திரை ஜோடிகளான ஆல்ய மானசா-சஞ்சீவ், நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகளாக இணைந்தார்கள். இதனைத்தொடர்ந்து, ஆல்ய மானசா கருவுற்றிருந்தார், அவரின் அன்றாட ஃபோட்டோக்களை சஞ்சீவ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து கொண்டே இருந்தார். சென்ற மாதம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு, ஆல்ய மானசா தன் குழந்தையின் புகைப்படத்துடன், குழந்தை பெயரையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/B-b7JGylYwS/?utm_source=ig_embed&utm_campaign=loading