Latest News
நடிகர் ரஜினிக்கு ஆஞ்சியோ சிகிச்சை… மருத்துவர்கள் சொல்வது என்ன…? வெளியான தகவல்..!
நடிகர் ரஜினிகாந்துக்கு ஆஞ்சியோ சிகிச்சை முடிவு பெற்ற நிலையில் மருத்துவர்கள் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
தமிழில் 73 வயதை கடந்த நிலையிலும் ஹீரோவாக நடித்த அசத்தி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். பெரும்பாலும் நடிகர்கள் வயதான உடனே தாத்தா கதாபாத்திரத்தில், அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க சென்று விடுவார்கள். ஆனால் தற்போது வரை ரஜினிகாந்தை மட்டும் நம்மால் ஹீரோவாக தான் பார்க்க முடிகின்றது. அப்படி இளம் நடிகர்களுக்கு டாப் கொடுக்கும் வகையில் சுறுசுறுப்பாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
சமீபத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கின்றார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
நேற்று இரவு 8 மணியளவில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பின்னர் மருத்துவமனையில் இருதய நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் சாய் சதீஷ் தலைமையில் டாக்டர் குழுவினர் ரஜினிகாந்துக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு சீரான ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் நெஞ்சுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்று முடிவும் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து ரஜினிக்கு வெறும் வயிற்றில் ரத்த நாள பரிசோதனை செய்யப்பட்டு பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு ஆஞ்சியோ ராம் செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அடிவயிற்றில் ரத்த நாளத்தில் லேசான வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதால் அதை சரி செய்வதற்கு ஆஞ்சியோ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன. சிகிச்சைக்கு பிறகு ரஜினிகாந்த் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். தொடர்ந்து மருத்துவர்கள் அவரின் உடல் நிலையை கண்காணித்து வருகிறார்கள். இன்று மாலை அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என கூறப்படுகின்றது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவித்திருந்ததாவது ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார் பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.