விஜய் நடித்த “சந்திரலேகா” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். சோனியா அகர்வாலுடன் வனிதா இணைந்து நடித்துள்ள “தண்டுபாளையம்” படம் இன்று வெளியானது. பொதுவாக ஆண் நடிகர்கள் தான் நெகட்டிவ் கேரக்டரில் அதிகமாக நடித்திருப்பார்கள்.
“தண்டுபாளையம்” படத்தில் வனிதாவும், சோனியாவும் நெகட்டிவாக நடித்திருப்பது நன்றாக வந்துள்ளது. வயது வந்தவர்கள் பார்க்ககூடிய படம் இது என சில தினங்களுக்கு முன்னர் பிரபல திரை விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரெங்கநாதன் சொல்லியிருந்தார்.
செய்தியாளர்களை சந்தித்த வனிதா விஜயகுமாரிடம் விஜய் பட பெயர்கள் தமிழில் இருப்பதில்லையே என கேட்கப்பட்டது. கேள்விக்கு பதிலளித்த வனிதா விஜய் படங்களில் தமிழ் நடிகைகளை நடிக்க வைப்பதே இல்லை, இதில் பெயரை பற்றி ஏன் பேச வேண்டும் என சொன்னார். விஜய் தனது படங்களில் தமிழ் நடிகைகளை நடிக்க வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

விஜய் கட்சியில் இணைந்து அவருடன் கட்சிப்பணியாற்றுவீர்களா? என்ற கேள்விக்கு, தான் சினிமாவில் மட்டுமே அதிக கவனம் செலுத்த உள்ளதாக சொன்னார்.
ஆனால் தனது ஆதரவும், அன்பும் விஜய்க்கு எப்போதும் உண்டு என உறுதியாக சொல்லிவிட்டார். என்ன இருந்தாலும் விஜய் படத்தின் கதாநாயகியாச்சே அந்த அன்பு தான் விட்டுப்போகுமா என்ன?.
“தண்டுபாளையம்” பிற மொழிகளில் வெளியாகியிருந்தது தனக்கு தெரியாது எனவும், எல்லோரும் தங்களது படைப்புகளை பற்றி பெருமையாக சொல்வது போலத்தான் “தண்டுபாளையம்” இயக்குனர் தன்னை அனுகியபோது தான் நினைத்ததாகவும், ஆனால் படம் இப்படி வரும் என தான் நினைத்து கூட பார்க்கவில்லை என்றார்.அதே அனைவரின் விருப்பமாக இந்த படம் அமையும் எனவும் சொன்னார் வனிதா விஜயகுமார்.