Entertainment
என் உயிர் இப்போ என்னிடம் இல்லை தேவி… பெல்ஸ் பேண்டில் மயக்கிய குந்தவை!
நடிகை திரிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்!
40 வயது நெருங்கியும் கூட அனைத்துபிரிவு வயதினரையும் மயக்கி வரும் நடிகை திரிஷா எப்படித்தான் இம்புட்டு அழகா இருக்காங்கன்னே புரியல. இன்னும் குறையாத அந்த அழகு அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் பார்க்கப்படுகிறது. தென்னிந்திய சினிமாவின் ஹோம்லி குயினான இவர் ஒல்லி பெல்லி அழகியாக 24 வருடங்களாக இந்த திரைத்துறையில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.
ஜோடி திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து அறிமுகமான இவர் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழில், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, மன்மதன் அம்பு, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தற்போது பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ திரைப்படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். நாநயன்தாரா இடத்தை காலி செய்ய மளமளவென மார்க்கெட் பிடித்து தற்போதைய பிஸியான நடிகையாக பார்க்கப்படுகிறார்.பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனுக்காக அழகழகான போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வரும் திரிஷா தற்போது பெல்ஸ் பேண்ட் அணிந்த மாடர்ன் உடையில் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.
