cinema news
ரஜினிக்கு மகளாக போகிறாரா ஸ்ருதி?…இன்னோரு சர்ப்ரைஸோட காத்திருக்கிறதா மெகா ட்ரீட்?…
தமிழ் திரையுலகை கலக்கி வரும் ஜாம்பவான்களாக இருந்து வருவபவர்கள் ரஜினி,கமல். கலையுலகில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.
ரஜினியின் திரை வாழ்வின் ஆரம்பத்தில் கமல்ஹாசன் அதிகமான ஒத்துழைப்பை வழங்கியவர். ரஜினியின் வளர்ச்சியில் அதிக கவனமும் செலுத்தியவர். ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கி இருந்தும் வந்திருக்கிறார்.
இவர்கள் இருவருக்கும் தனித்தனி ரசிகர் படையே இன்றும் உண்டு. அந்த காலத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் எல்லாம் அதிரடி ஹிட்.
ரஜினி கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பிறகு அவர் கமலுடன் இணைந்து நடிப்பது நிறுத்தப்பட்டது. இருவரும் மலை போன்ற வளர்ச்சி பெற்றுவந்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலிருக்கும்.
கமல்ஹாசனை வைத்து லோகேஷ் இயக்கிய “விக்ரம்” படம் மிகப்பெரிய வெற்றியாக மாறியதால் ரஜினி – லோகேஷ் இனையும் படத்தின் வேலைகள் துவங்கும் முன்னரே எதிர்பார்ப்பு பற்றிக்கொண்டுள்ளது.
இதனிடையே ரஜினி – லோகேஷ் படத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கயிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஸ்ருதி சமீபத்தில் எடுத்த ஆல்பம் ஒன்றில் லோகேஷ் நடித்திருந்தார், அதனை தொடர்ந்து இவர்கள் இருவரை பற்றிய கிசுகிசுக்கள் பற்றத்துவங்கியது.
இந்த சூழ்நிலையில் ஸ்ருதிஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்க உள்ளதாக வந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இதைவிட இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இதே படத்தில் கமல்ஹாசனும் இணைய உள்ளாராம் .
அது நடந்தால் வெகு நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் நடிப்பதால் இருவரின் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். அரசியலில் கால் வைத்துள்ள விஜய் தனது கடைசி பட அறிவிப்பை எப்பொழுது வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த இரு ஜாம்பவான்களும் இணைவார்களா? என்ற குழப்பமும் எழுந்துள்ளது.