Latest News
தமிழ் இயக்குனர் எனக்கு ஒரு வருடத்திற்கு மேலாக பாலியல் தொல்லை… நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு…!
தமிழ் இயக்குனர் தன்னை ஒரு வருடத்திற்கும் மேலாக செக்ஸ் டார்ச்சர் செய்து வந்தார் என்று மலையாள நடிகை சௌமியா கூறியிருக்கின்றார்.
மலையாள சினிமாவில் தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்திருப்பது ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை தான். இந்த அறிக்கையில் மலையாள திரையுலகை சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருந்து வந்தது குறித்து தெரிவித்திருந்தார். இந்த அறிக்கை வெளியானது முதலே பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகைகள் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவாக ஏராளமான நடிகர்கள், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மலையாள நடிகை சௌமியா குற்றம் சாட்டியிருக்கின்றார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்திருந்ததாவது “எனக்கு 18 வயது. நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தேன். என் பெற்றோருக்கு சினிமா குறித்து எதுவும் தெரியாது. அந்த சமயத்தில் நான் ஒரு தமிழ் படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தேன். என் வீட்டின் அருகே வாசித்த நடிகை ரேவதியால் மயங்கி கிடந்தேன். இயக்குனரும் அவரின் மனைவியுடன் படத்தில் நடிப்பதற்கான ஸ்கிரீன் டெஸ்ட்க்கு என்னை வரச்சொன்னார்.
நடிக்கும்போதே நான் முழுக்க முழுக்க இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருந்தேன். அவரின் ஒவ்வொரு மிரட்டலுக்கும் நான் பயந்து இருந்தேன். ஒருநாள் இயக்குனரின் மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் அவர் என்னை அழைத்து முத்தமிட்டார். அப்போது நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை. பின்னர் பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
அந்த சமயத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த கொடுமையை அனுபவித்தேன். நான் அந்த இயக்குனரின் அடிமையாக இருந்தேன். மேலும் அந்த இயக்குனர் என்னுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். அப்போது என் மூளையை மொத்தமாக குழப்பி விட்டார். அந்த உணர்வில் இருந்து வெளிவருவதற்கு எனக்கு 30 வருடங்கள் ஆகிவிட்டது” என்று தெரிவித்தார். மேலும் தனக்கு நேர்ந்த துயரத்தை பற்றி பேசிய அவர் அந்த இயக்குனரின் பெயரை மற்றும் கடைசிவரையில் பகிரவில்லை.