1980களில் தமிழ் சினிமா ரசிகர்களை தனது குடும்பப்பாங்கான நடிப்பால் வசியப்படுத்தி வைத்திருந்தவர் சரிதா.
கருப்பு நிற தோலும், சற்று குண்டான உடல்வாகும் கொண்டிருந்தவர் சரிதா. குடும்ப பாங்கான கதைகளில் மட்டுமே இவரை அதிகமாக காணமுடிந்தது.
நடிகர் திலகம் சிவாஜி கனேசனுடன் “கீழ்வானம் சிவக்கும்”, துணை”, “இரு மேதைகள்”, “சிம்ம சொப்பனம்” போன்ற படங்களிலும் நடித்திருந்தார்,
பாக்யராஜுடன் “மௌன கீதங்கள்”,”மலையூர் மம்பட்டியான்” போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை தேடித்தந்தது. இவர் நடித்த “தண்ணீர் தண்ணீர்” திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரைக் பெற்றுத்தந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த “நெற்றிக்கண்” படத்தில் தொழிலதிபராய் வரும் ரஜினியோடு சரிக்கு சமமாக சவால் விட்டு போட்டி போட்டு நடிப்பில் பின்னியிருப்பார்…
“புதுக்கவிதை” படத்திலும் ரஜினியோடு நடித்திருந்தார். பின்னர் நாட்கள் செல்லச்செல்ல தமிழ் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி விட்டார்.
“ஜூலி கணபதி” படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தார். சரிதாவை நடிகையாக மட்டுமே தெரிந்திருக்கலாம். ஆனால் இவர் படங்களில் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுக்கும் ‘டப்பிங் ஆர்டிஸ்ட்’ஆகவும் இருந்து வருகிறார்.
“எங்க சின்ன ராசா” படத்தில் ராதாவிற்கு டப்பிங் பேசி இருப்பார். உலக அழகி சுஷ்மிதா சென்னிற்கு “ரட்சகன்” படத்தில் பின்னணி குரல் கொடுத்திருப்பார்.
அதேபோல நடிகை சினேகாவிற்கும், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ விஜயசாந்திக்கும் பின்னணி பேசி இருப்பார். “காதல் தேசம்”பட கதாநாயகி தபு பேசிய வசனங்களின் உண்மையான குரலுக்கு சொந்தக்காரர் சரிதாவே தான்.