Rashmika
Rashmika

என்னதான் பண்ணிட்டேன் நான் அப்படி!! வாயை பிளந்த நடிகை

இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே என்ற தெலுங்கு பாடல் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.

இவர் கன்னடம், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் டாப் நடிகை என்றே கூறலாம். கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தில் இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே என்ற பாடல் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே தன் முகத்தை பார்க்க வைத்தவர். இவர் ரசிகர் ஒருவர் செய்த செயலால் பெரும் இன்ப அதிர்ச்சியில் உரையந்து உள்ளார்.

ரஷ்மிகா தன் ட்விட்டர் பக்கத்தில், அப்படி நான் என்ன தான் பண்ணிட்டேன்? என்று வாயைப் பிளந்து உள்ளார். ரஷ்மிகா தனது 24வது பிறந்தநாளை ஏப்ரல் 5ம் தேதி கொண்டாடினார். அவரின் பிறந்த நாளையொட்டி, ரசிகர் ஒருவர் சுவாமிக்கு அபிஷேகம் செய்த வீடியோவை பார்த்து, அப்படி நான் என்னதான் பண்ணிட்டேன் இந்த அன்பு எனக்கு கிடைக்க என்று பேரின்பத்தில் முழ்குயுள்ளார்.