Latest News
ஹலமதி ஹபிபோ…! தளபதி 69 படத்தில் இணையும் பூஜா ஹெக்டே… வெளியான தகவல்..!
தளபதி 69 திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய், இவர் நடிப்பில் கடைசியாக உருவாக இருக்கும் திரைப்படம் தளபதி 69. இவர் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார். இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படம் 425 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் நடிகர் விஜய் கமிட்டாகி இருக்கும் நிலையில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி வருகின்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹச் வினோத் இயக்க இருக்கின்றார் என்பது ஏற்கனவே உறுதியாகி இருக்கும் நிலையில் இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். நேற்று இப்படத்தில் அனிமல் படத்தில் நடித்த அசத்தியிருந்த பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பிஸ்டு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.