ஆறு, வேல், சிங்கம், சிங்கம்1, சிங்கம்2 முதலிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி ஆறாவது முறையாக நடிகர் சூர்யாவுடன் அருவா என்ற திரைப்படத்தின் மூலம் இணைய உள்ளார்.
இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க, டி.இமான் இசை அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கும் தருவாயில், அரசின் 144 தடை உத்தரவால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்தானது.
அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் பல்வேறு நடிகைகளை பரிந்துரைத்துள்ளனர். ஆனால் இயக்குனர் ஹரியோ புதுமுக நாயகிக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் பூஜா ஹெக்டே என்ற தெலுங்கு நடிகையை அருவா படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கொடுக்கப்படுவதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.