Entertainment
மலையாள சூப்பர் ஸ்டாருடன் போட்டோவில் இருப்பது நம்ம கீர்த்தியா? வைரலாகும் புகைப்படம்!
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தனது 60வது பிறந்தநாளை நேற்றைய தினமான மே 21ஆம் தேதி கொண்டாடினார். இதனையடுத்து, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, உலக நாயகன் கமல்ஹாசன் என திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் அவர்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து, நடிகை கீர்த்தி சுரேஷும் நடிகர் மோகன்லாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அந்த பிறந்தநாள் வாழ்த்துடன் பழைய போட்டோ ஒன்றையும் வெளியிட்டு, “ஒரு புகைப்படத்தை பகிர்வது முதல் திரை இடத்தைப் பகிர்வது வரை, அது ஒருபோதும் கடந்து போகாத ஒரு கனவு, எனக்கு நம்பமுடியாத விலைமதிப்பற்றதாக இருக்கும். லால் மாமா நன்றி” என்ற பதிவுடன், #HappyBirthdayMohanlal என்ற ஹஸ்டாக்கையும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், அதனை பார்த்த ரசிகர்கள் பலர், மலையாள சூப்பர் ஸ்டாருடன் போட்டோவில் இருப்பது நம்ம கீர்த்தியா? என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அந்த போட்டோவை பார்த்த பலரும், கீர்த்தி நீங்க செம்ம குயூட்டா இருக்கிங்க, பிறந்தநாள் வாழ்த்துகள் மோகன்லால் சார் என்றும் கமெட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். தற்போது, இந்த போட்டோ சோஷீயல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.