Latest News
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போனா நடிகை கனகா… வைரலாகும் புகைப்படம்…!
90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்த நடிகை கனகா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
மறைந்த பழம் பெறும் நடிகை தேவிகாவின் மகள் கனகா. இவர் 1989 ஆம் ஆண்டு வெளியான கரகாட்டக்காரன் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகிய பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தமிழில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கடைசியாக 1999 ஆம் ஆண்டு வெளியான விரலுக்கேத்த வீக்கம் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் பின்னர் சினிமாவை விட்டு விலகினார்.
ஷாப்பிங் மால் ஒன்றில் ரசிகர் ஒருவர் கனகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பலரும் கனகாவா இது ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிவிட்டாரே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நீண்ட நாள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இவர் பொதுவெளியில் வராமல் இருந்து வருகின்றார். யாரையும் சந்திப்பது கிடையாது. தனிமையில் அவரது வீட்டிலேயே வசித்து வருகின்றார். திருமணமும் செய்து கொள்ளாமல் இருந்து வரும் இவரின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு போய் இருக்கிறார்கள்.