Entertainment
மும்பைக்கு போனதும் முழுசா மாறிவிட்ட ஜோதிகா…. ஜிம்மில் முரட்டு ஒர்க் அவுட் பண்ணும் வீடியோ!
நடிகை ஜோதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் ஒர்க் அவுட் வீடியோ இதோ!
வடக்கில் இருந்து வந்த கொழுக் மொழுக் நடிகையான ஜோதிகா 1999 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் தன சூர்யா , ஜோதிகா இருவரும் சேர்ந்து நடித்தார்கள். சூர்யா இப்படத்திற்கு முன்னர் சில படத்தில் நடித்திருந்தாலும் பூவெல்லாம் கேட்டுப்பார் படம் அவரை பரீட்சியமான முகமாக மாற்றியது.
இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷன் குவித்து வெற்றி பெற்றது. அதன் பின் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததால் நிஜத்திலும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். பின்னர்
2006ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இதனிடையே ஜோதிகா – சூர்யா மற்றும் குழந்தைகள் மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர்.
சூர்யா அங்கு சில பிசினஸ் துவங்கியுள்ளார். பிள்ளைகளின் படைப்பையும் அங்கேயே தொடர்க்கிறார்கள். ஜோதிகா இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். இந்நிலையில் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.
video Link: https://www.instagram.com/p/Crkp7BPv16F/