cinema news
வனிதாவை அடுத்து நடிகை ஹன்சிகா செய்துள்ள செயலைப் பாருங்க
கொரொனாவால் இந்தியாவில்144 தடை உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கின்றன. இதனையடுத்து சினிமாதுறை சார்ந்த பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில் வீட்டிலேயே இருப்பதனால் போரடிக்கும் நடிகைகள் சிலர் தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது, ரசிகர்களுடன் சாட் செய்வது என தங்களை பிசியாக வைத்துள்ளனர். இதில், நடிகை ஹன்சிகா மோத்வானி கொஞ்சம் வித்தியாசமான முறையில் ரசிகர்களின் கவனத்தை தன் வசம் ஈர்த்துள்ளார்.
அந்தவகையில் அவர் பிக்பாஸ் வனிதாவை அடுத்து ஹன்சிகா மோத்வானியும் புதிய யூடியூப் சேனலை தொடங்கியிருக்கிறார். படப்பிடிப்புகள் இருக்கும்போது ரசிகர்களை அவ்வளவுவாக் கண்டுகொள்ளுவதில்லை. ஆனா, இப்போ ரசிகர்கள் தங்களை மறந்து விடக்கூடாது என்று ஏதேதோ உத்தியை கையாண்டு வருகின்றனர்.