திருமணம் செய்யமட்டேன், நடிக்கவும் மாட்டேன் – நடிகை சார்மி அறிவிப்பு

221
திருமணம் செய்யமட்டேன், நடிக்கவும் மாட்டேன்

திருமணம் செய்ய மாட்டேன் என ஏற்கனவே கூறியிருந்த நடிகை சார்மி தற்போது நடிக்க மாட்டேன் எனவும் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழில் டி.ராஜேந்தர் இயக்கத்தில் சிம்பு முதன் முதலாக ஹீரோவாக நடித்த காதல் அழிவதில்லை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சார்மி. அதன்பின் ஆந்திரா சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் கவர்ச்சி காட்டியும் நடித்தார்.

பிரபல இயக்குனர் ஒருவருடன் சந்தித்த காதல் தோல்வி காரணமாக, நான் என் வாழ்வில் திருமணமே செய்து கொள்ளமாட்டேன் என சில வருடங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இனிமேல் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என தற்போது அறிவித்துள்ளார். ஆனால், தயாரிப்பாளராக சினிமாத் துறையில் தொடர்வேன் எனவும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பாருங்க:  சுபஸ்ரீயின் மரணம் தற்செயலானது.. எல்லாம் விதி... இப்படி பேசலாமா பிரேமலதா?