saipallavi
saipallavi

மலர் டீச்சர் பூமியில் மலர்ந்த தினம் இன்று….கொண்டாடி வரும் ஸ்டூடன்ட்ஸ்..

“பிரேமம்”  படத்தில் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அறிமுக படமே பிரம்மாண்ட வெற்றி தான். பிறகு என்ன தொடர்ச்சியாக வாய்ப்புகள் தான். பட்டி, தொட்டி எங்குகம் இவரை பற்றிய பேச்சுதான். எகிறியது மார்க்கெட். எக்கச்சக்க ஆஃப்ர்கள் காத்திருந்தது இவரின் சம்மதத்திற்காக. மலையாள சினிமாவை மிரட்டிய படம் “பிரேமம்”.

அடுத்தது தமிழ் சினிமாவில் கிடைத்தது சான்ஸ். அது மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடிக்க வாய்ப்பு. இப்படி பாப்புலர் செலிப்ரடீஸ் லிஸ்டில் இணைந்தார் சாய் பல்லவி.
தனுஷுடன் இவர் ஆடிய ‘ரவுடி பேபி’ பாடலில் இவரின் நடனத்தின் நளினம் வியக்கவைத்தது.

rowdy baby
rowdy baby

பார்ப்பதற்குப் பூ போல மென்மையான தோற்றம் கொண்ட இவரின் டான்ஸ் பெர்ஃபாமன்ஸோ பூகம்பம் வரும் போது பூமியில் ஏற்படும் அதிர்வுகள் போல அசரவைத்தது அவரது ரசிகர்களை. யூ-டியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற சாதனையயும் கைப்பற்றியது இந்த பாட்டு.

danush sailpallavi
danush sailpallavi

“மாரி 2” படத்தில் தனுஷுடன் நடித்த இவருக்கும் பாராட்டுக்கள் கிடைத்தது. யதார்த்தமான நடிப்பை தனுஷ் போன்ற ஒரு பிரபலத்திற்கு இணையாக நடித்தது இவரை மேலும் ரசிக்க வைத்தது. சூர்யாவுடன் என்,ஜி.கே படத்தில் கலக்கியிருப்பார் தனது நடிப்பால். எத்தனை படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவரின் மலர் டீச்சர் கேரக்டர் கதாபாத்திரம் தான் இவருக்கு அடையாளமாக இருக்கிறது இன்றுவரை.

திரை உலகில் மலராக மலர்ந்து வாசம் வீசி வரும் சாய் பல்லவியின் பிறந்த தினம் இன்று. அவரது பிறந்தநாளுக்கு வலைத்தளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள் மலர் டீச்சரின் மாணவர்கள் அதாவது அவரது ரசிகர்கள்.