cinema news
பிறந்த நாள் கொண்டாடும் பிந்து மாதவி!…வாழ்த்தி வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்!…
ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் பிந்து மாதவி. மாடலாக வலம் வந்த இவர் அடுத்தது படங்களில் நடிக்க துவங்கினார். தனது தந்தையின் கடுமையான எதிர்ப்பையும் மீறி தான் இவர் சினிமாவில் நடிக்க வந்தார். பிந்து மாதவி எடுத்த முடிவினால் தந்தை – மகள் இருவரும் எட்டு மாதங்களுக்கு மேலாக பேசாமலேய இருந்திருக்கின்றனர்.
தெலுங்கு படத்தில் முதல் முதலாக அறிமுகமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரரான கிருஷ்ணாவுடன் இணைந்து “கழுகு” படத்தில் நடித்தார். விறுவிறுப்பான இந்த படம் இவர்கள் இருவருக்கும் நல்லதொரு பெயரை வாங்கி கொடுத்தது. சைலன்ட்டான வெற்றி படமாக மாறியது “கழுகு”.
இளைஞர்கள் பலரின் மனதை கவர சிவகார்த்திகேயனுக்கு காரணமாக மாறிய “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் பிந்து மாதவி நடித்திருந்தார். கதாநாயகி ஸ்ரீதிவ்யா படிக்கும் பள்ளியில் டீச்சராக வருவார். இவரை தான் முதலில் சிவகார்த்திகேயன் லவ் பண்ண நினைப்பார். அதன் பின்னே தான் ஸ்ரீதிவ்யா மீது காதல் ஆசை வரும்.
இதே போல தான் விமல் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த “கேடி பில்லா கில்லாடி ரெங்கா” படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து விமலுடன் “தேசிங்குராஜா” படத்திலும் நடித்திருந்தார். சூரி காமெடியனாக நடித்திருப்பார் இந்த படத்தில். படத்தில் கவர்ச்சியை அள்ளித்தெளித்திருப்பார் பிந்து. படத்தில் வரும் ‘அம்மாடி அம்மாடி’ பாடல் வெளியான நேரத்தில் இளசுகளை கிறங்கடித்தது.
ஜூன் மாதம் 14ம் தேதி பிறந்த பிந்து மாதவி இன்று தனது 38வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறார். இவரின் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்தி வருகிறார்கள்.