மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

அதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் கொடி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தமிழில் காட்டிலும் தெலுங்கில் தான் அம்மண்ணிக்கு மார்க்கெட் அதிகம். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். கைவசம் படவாய்ப்புகளும் வரிசையாக க்யூ கட்டி தான் இருக்கிறது.
அனுபமா பரமேஸ்வரன் மற்ற நடிகைகளைப் போல, இவரும் சோசியல் மீடியாவில் கொஞ்சம் ஆக்டிவ் தான். ஆனால் இப்பொழுது இவர் ரசிகரிடம் தன் ஸ்கூல் குரூப் போட்டோவை வெளியிட்டு இதில் நான் எங்க இருக்க கண்டுபிடிங்க பார்க்கலாம்? என்று கேள்வி கேட்க, “அக்கா உங்கள ஒரு குட்டி பையன் எட்டிப் பார்க்குறான் பாருங்க” என்று ரசிகர் ஒருவர் நகைச்சுவையுடன் சிறு வயது அனுபமாவை கண்டுபிடித்துவிட்தாக கலாய்த்து உள்ளார்.