“அங்காடி தெரு” படத்தில் மூலம் அதிகமானோரால் அறியப்பட்ட நாயகியானார் அஞ்சலி. “எங்கேயும் எப்போதும்” படத்தில் ஜெய்க்கு ஜோடி போட்டு நடித்தார். “கலகலப்பு” படத்தில் விமலுக்கு இணையானார். குறுகிய காலத்திலேயே வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைத்து வந்தார் இவர்.
திடீரென தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார். ஜெய்க்கும் இவருக்கும் இடையே காதல், இருவரும் லிவ்விங்- டூகெதராக வாழ்ந்து வந்தனர் என செய்திகள் கசிந்தது. தெலுங்கு சினிமாவில் திடீரென நடிக்கத்துவங்கினார் அஞ்சலி.
ஷங்கர் இயக்கி வரும் “கேம் சேஞ்சர்” படத்தில் அஞ்சலி நடித்து வருகிறார். ‘கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி” பட நிகழ்ச்சியில் முன்னனி நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

திடீரென பாலகிருஷ்ணா அஞ்சலியை மேடையில் தள்ளி விட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் அதை பார்த்து. அவர் தள்ளி விட்ட வீடியோதான் இப்போது வைரல்.
ஆனால் அஞ்சலியோ என்ன இருந்தாலும் அவர் டோலிவுட்டின் முக்கிய நடிகர் அல்லவா என்பதால் சிரித்த படியே சமாளித்துவிட்டார். ஆனாலும் பாலகிருஷ்ணாவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நெட்டிசங்கள் எண்ணெய் இல்லாமலே வறுத்தெடுக்க துவங்கிவிட்டனர்.
இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்களான நிலையில் இது குறித்து தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் இருவரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் நல்ல பரஸ்பரம் உண்டு.
பாலகிருஷ்ணாவுடன் வெகு நாட்களுக்கு பிறகு மேடையை பகிர்ந்து கொண்டது தனக்கு மகிழ்ச்சியளித்தது என சொல்லியுள்ளார். அஞ்சலி லேட் என்ட்ரி கொடுத்திருந்த போதும் நெட்டிசன்கள் தங்களது வேலையை பார்த்துக்கொண்டுதான் வருகின்றனர்.