cinema news
அதெல்லாம் பொய் உண்மையை போட்டு உடைத்த அஞ்சலி
கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் முதலிய தமிழ் படங்களில் நடித்து, தெலுங்கு திரை உலகில் அறிமுகம் ஆனார். தெலுங்கில் இவர் நடித்த சீதம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு என்ற படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் ரொம்ப பிஸியான நடிகையாக வலம் வந்தார். பின்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு, நாடோடிகள் 2 தமிழ் படத்திலும் நடித்தார்.
அஞ்சலியும் ஜெய்யும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக சினிமா வட்டாரங்கள் முணுமுணுத்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதாகவும், படப்பிடிப்பு தளத்தில் கூட அஞ்சலியும் ஜெய்யும் சரியாக படத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பேட்டி அளித்ததை நாம் கண்டிருப்போம். ஆனால் இப்போது அஞ்சலி அப்படியே அந்தர்பல்டி அடித்துள்ளார்.
அதன்படி, நடிகை அஞ்சலியும் நடிகர் ஜெய்யும் நல்ல நண்பர்கள் என்றும் அவர்கள் இருவரும் காதலிக்கவே இல்லை என்றும் யாரோ ஒருவர் சும்மா கொளுத்தி போட்டு விட்டு இருக்கிறார்கள் என்றும் நான் ஜெய்யை காதலிப்பதாக சொல்வதெல்லாம் பொய் என்று உண்மையை பேட்டி ஒன்றில் போட்டு உடைத்துள்ளார்.