Entertainment
ஓ கிரேசி பெண்ணே… கொட்டும் மழையிலும் கச்சேரியில் பாட்டு பாடிய ஆண்ட்ரியா வீடியோ!
நடிகை ஆண்ட்ரியாவின் பாடல் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!
ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் பிறந்தவரான நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் 2007 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர் திரைப்பட பின்னணி பாடகராகவும் இருந்து வருகிறார்.
ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, வடசென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார் ஆண்ட்ரியா. இதனிடையே பிரபலம் ஒருவரை காதலித்து ஏமாற்றப்பட்டார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் சில வருடம் நடிக்காமல் இருந்தார்.
பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர் தற்போது கொட்டும் மழையில் மேடை கச்சேரியில் பாடல் பாடி ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
video Link: https://www.instagram.com/p/CrqJesco8AQ/
