சினிமா திரை உலகில் பெரும் நடிகையாக வலம் வருவார் என்று ரசிகர்களின் பெரும் கனவை சற்றும் எதிர்பாராமல் கல்யாணத்தில் முற்றுப்புள்ளி வைத்தார் அமலாபால். திடீரென்று கல்யாணம் செய்து கொண்ட சிறிது காலத்திற்குள் கருத்துவேறுபாடு காரணத்தால் கணவரை விவாகரத்து செய்தார்.
இதனைத்தொடர்ந்து சினிமாத்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு ஆடை படத்தில் எந்த ஹீரோயினும் சற்றும் நடிக்க முன்வராத கதாபாத்திரத்தில் நடித்தார் அமலாபால். பின்பு இவர் இந்தி பாடகர் ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அந்த பாடகரை தான் அமலா காதலிப்பதாகவும் ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், இவர் தந்தை இறந்த பின்பு பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்போது தான் வாழ்க்கையின் புதிய விஷயங்களை உணர்த்திருப்பதாகவும், இதனை தொடர்ந்து நடிகை அமலாபால் பெற்றோர்கள், பெண்கள் குறித்தும் முக்கியமாக அம்மாவை குறித்தும் உருக்கமான மெசேஜ் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/B-cDZZ3DRWg/?utm_source=ig_embed&utm_campaign=loading